Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சன் டிவி TRPக்கு செக் வைக்கும் முன்னணி தொலைக்காட்சி.. இனி டாப்-ல இந்த சேனல் தான்..

தொலைக்காட்சியில் தற்போது வரை TRPயில் முன்னணியில் திகழ்ந்து வரும் டிவி என்றால் அது கண்டிப்பாக சன் டிவி. ஆம் சீரியல்கள் மூலம் தற்போது டாப்பில் இருந்து வருகிறது.

அதிலும் இந்தியளவில் உள்ள TRP ரேட்டிங்கில் கூட அதிக பார்வையாளர்களை பெற்று டாப் 3யில் இடம் பிடித்தது சன் தொலைக்காட்சி.

மேலும் சன் டிவியின் TRP வேட்டைக்கு முக்கிய காரணமாக இருப்பது சீரியல்கள் தான். ஆம், ரோஜா, கண்மணி, பாண்டவர் இல்லம், சந்திரலேகா உள்ளிட்ட தொடர்களை உதாரணமாக கூறலாம்.

இந்நிலையில் தொடர்ந்து தமிழ் தொலைக்காட்சிகளில் TRP ரேட்டிங்கில் முதல் இடத்தில இருந்து வரும் சன் தொலைக்காட்சிக்கு செக் வைக்க போகிறது விஜய் டிவி.

ஆம் வரும் அக்டோம்பர் 4ஆம் தேதி முதல் விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 4 துவங்கவுள்ளது. இதனால் கீழே சார்ந்திருக்கும் விஜய் டிவியின் TRP எகிறும் என்றும், அதே சமயம் TRP ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடித்து சன் டிவியை பின்னுக்கு தள்ள அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்று தெரிவிக்கின்றனர்.