கையில் மதுபாட்டில் உடன் பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ், சர்ச்சைக்குரிய வீடியோவை கிழித்தெடுக்கும் நெட்டிசன்கள்..
உலகநாயகன் கமல்ஹாசன் முன்னின்று தொகுத்து வழங்கிவரும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 4, இந்த நிகழ்ச்சி சென்ற வாரம் ஆரம்பமாகி ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
இதில் கலந்து கொண்ட நட்சத்திரங்களில் ஒரு சிலர் ரசிகர்களுக்கு தெரிந்த முகங்கள் அல்ல. அப்படி ஒருவர் தான் பாலாஜி முருகதாஸ், இவர் மாடல் மட்டுமின்றி Mr.Pefect Body 2017 என்ற படத்தையும் வென்றுள்ளார்.
மேலும் பிக்பாஸில் இவர் தனது கதையை கூறியதால் போட்டியாளர்கள் கண்கலங்கினர், அவரின் தந்தை மற்றும் அம்மா இருவரும் மது பழக்கத்திற்கு அடிமை என குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில் தற்போது பாலாஜி முருகதாஸ் Swimming pool-ல் மது பாட்டிலை அவரின் தலையில் ஊற்றி குளிப்பது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.
இதனை கண்ட நெட்டிசன்கள் அந்த விடியோவை பதிவிட்டு அவரை கிழித்தெடுத்து வருகின்றனர்.
யோக்கியன் #BalajiMurugaDoss 😄ஏழை தாயின் மகன் ..குடிகார பெற்றோரின் மகன் .. பாவம் ல 😞
— 𝕽𝖔𝖒𝖆𝖓𝕰𝖒𝖕𝖎𝖗𝖊 (@Positivevibessa) October 11, 2020
ச்சா ஒரு மனுஷன் குளிக்க கூட பாத்ரூம் இல்லாம ஷாம்பு வாங்க கூட காசு இல்லாம பீர் ஊத்தி குளிக்கிறாரு பாவம்😑#BiggBossTamil4 #BiggBossTamil pic.twitter.com/hzqpHWSrAr