Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இனிமே அந்த விசயத்துக்கு நோ! TRP ரேட்டிங் விசயத்தில் முக்கிய அறிவிப்பு! ஆடிப்போன டிவி சானல்கள்

தற்போது டிவி சானல்கள் மத்தியில் கடும் போட்டியே இந்த டி.ஆர்.பி விசயத்தில் தான். ஒருவரை ஒருவர் முந்திக்கொள்கிறார்கள். விளம்பர நிறுவனங்கள் இந்த டி ஆர் பி புள்ளிகள் அடிப்படையில் தான் டிவி சானல்களுக்கு விளம்பரங்களை தருகின்றன.

இதன் மதிப்பீட்டை பொறுத்து தான் சேனல்கள் வருமானம் பெறுகின்றனர். செய்தி சானல்களுக்கும் இதே நிலையே.

அண்மையில் ஆங்கில செய்தி சானல் மற்றும் லோக்கல் சானல்கள் இந்த டி.ஆர்.பி விசயத்தில் முறைகேட்டி ஈடுபட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் டி.ஆர்.பி அமைப்பான பார்க் இனி ரேட்டிங் வெளியிடுவதை மூன்று மாத காலத்திற்கு நிறுத்துவதாக கூறியுள்ளது.

மேலும் பார்வையாளர்கள் குறித்த தகவல்கள் மட்டும் வெளியிடப்படும், தனித்தனி செய்தி சானல்களுடைய பார்வையாளர்களின் எண்ணிக்கை வெளியிடப்படாது என்றும் தெரிவித்துள்ளார்.