போன சீசன்ல இவரு இருந்திருந்தா கவின் லாஸியா கதை நடந்திருக்காது! கலக்கலான மீம் - அட மிஸ் பண்ணிட்டாங்களே
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 தொடங்கி 14 நாட்களை எட்டிவிட்டது. முதல் வாரம் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக Eviction இல்லை என கூறப்பட்டது.
Nominate செய்யப்பட்டிருந்தவர்களில் இவ்வாரம் நடிகை ரேகா வெளியேறுகிறார் என கூறப்படுகிறது. அதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
அதே வேளையில் அனிதா சுரேஷ் மோதல் ஒரு பக்கம் இருக்க கேப்ரி மற்றும் பாலா இடையே காதல் அலை எழுவது போல காட்டப்பட்டு வருகிறது.
இதே போல கடந்த சீசனில் காதல் அலையில் சிக்கி அதிகம் பேசப்பட்ட ஜோடி கவின் லாஸ்லியா என்பதை ரசிகர்கள் மறக்க மாட்டார்கள்.
இந்நிலையில் இந்த சீசன் ஆரி கடந்த சீசனில் இருந்தால் கவின் லாஸ்லியா கதை ஓடியிருக்காது என கூறி சூர்யா நடித்த மௌனம் பேசியதே படத்தின் காட்சி புகைப்படத்தை வேடிக்கையாக பதிவிட்டுள்ளார் ரசிகர் ஒருவர்.
The whole of kavin losliya wouldnt have happened, if Aari bro had been there last time....#BiggBossTamil4 pic.twitter.com/qrZr0r5Dzy
— someone (@Evano0ruvan) October 16, 2020