சுரேஷ் சக்ரவர்த்தியை வாடா போடா என சனம் திட்டும் அளவிற்கு சென்ற பிக்பாஸ் டாஸ்க், அதிர்ச்சியளிக்கும் இரண்டாவது ப்ரோமோ..
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆரம்பமாகி ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும் சென்ற வாரம் வைல்ட் கார்டு எண்ட்ரியாக பிரபல தொகுப்பாளர் அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார், என்பது அனைவரும் அறிந்ததே.
அதுமட்டுமின்றி கடந்த ஞாற்றிக்கிழமை எலிமினேஷன் என்பதால் நடிகை ரேகா பிக்பாஸ் போட்டியிலிருந்து வெளியேற்ற பட்டார். இதனால் மற்ற போட்டியாளர்களும் வருத்தத்தில் இருந்தனர்.
இந்நிலையில் டாஸ்க் ஒன்றிற்காக இரண்டாக பிரிந்த பிக்பாஸ் போட்டியாளர்களிடையே அடிக்கடி வாக்குவாதம் வந்து கொண்டே இருந்தது.
ஆனால் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில் சுரேஷ் சக்ரவர்த்தியை வாடா போடா என சனம் ஷெட்டி திட்டும் அளவிற்கு சண்டையிட்டு கொள்கின்றனர்.