பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தானா? மிக குறைவான ஓட்டு இவருக்கே!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 மூன்றாம் வாரத்தில் சென்று கொண்டிருக்கிறது. போட்டியாளர்களுக்கு அரச குலம், அரக்கர் குலம் என டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால் அவர்கள் சொர்க்கபுரி, மயாபுரி என இரண்டு அணியாக பிரிக்கப்பட்டுள்ளார்கள். நிகழ்ச்சியில் மறுபடியும் சண்டை, சலசலப்பு என நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த வாரம் ஆரி, ஆஜித், அனிதா, சுரேஷ், பாலாஜி ஆகியோர் வெளியேற்று படலத்திற்கான போட்டியில் இருக்கிறார்கள்.
செய்தி தளம் ஒன்று நடத்திய ஓட்டெடுப்பில் ஆஜித் தான் மிக குறைவாக வாக்குகள் பெற்றுள்ளார். இதனால் அவரே இவ்வாரம் வெளியேறுவார் என சொல்லப்படுகிறது.