Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அர்ச்சனாவின் முகத்திரையை கிழித்த பிரபல நடிகை! பல விசயங்களை அடுக்கடுக்காக கூறி போட்ட பதிவு

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 ல் இந்த வார இறுதி நெருங்கிவிட்டது. வெளியேறப்போகும் இரண்டாம் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு அலையாடுகிறது.

ஆரி, பாலாஜி, அனிதா, சுரேஷ், ஆஜித் ஆகிய ஐந்து பேர் இதில் இருக்கிறார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியின் நடப்புகள் குறித்து சினிமா துறை சார்ந்த சிலரும் பார்வையாளர் போல கருத்தும் விமர்சனமும் தெரிவித்து வருகின்றனர்.

அவ்வகையில் நடிகரும், நடன இயக்குனருமான சதீஷ் தற்போது அர்ச்சனா எப்போ பிக்பாஸ் வீட்டை விட்டு போவாங்க! எதும் ஐடியா இருக்கா என ட்வீட் போட ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது ஒரு பக்கம் இருக்க நடிகை ஸ்ரீ பிரியா சமூக வலைதளங்களில் சுரேஷ் சக்ரவர்த்திக்கு இருக்கும் செல்வாக்கை கண்டு பயமாக இருக்கிறது போல. மற்றவர்களிடம் நடத்தும் விதம் கடினமாக இருக்கிறது. சனம் விசயத்தில் அர்ச்சனா சுரேஷை மன்னிப்பு கேட்க சொன்னது கடுமையாக நடந்துகொண்ட போல இருந்தது. மெதுவாக பக்குவாம எடுத்துச்சொல்லியிருக்கலாம். ஆனால் அர்ச்சனாவின் உற்சாகத்தை பாராட்டுகிறேன். நிஷா தான் பிக்பாஸ் வின்னர் என தோன்றுகிறது என கூறியுள்ளார்.