Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எலிமினேஷனிலிருந்து காப்பாற்றப்பட முக்கிய நபர், அப்போ வெளியேறுவது இவர் தானா! வெளியான மூன்றாவது ப்ரோமோ..

உலகநாயகன் கமல்ஹாசன் முன்னின்று தொகுத்து வழங்கிவரும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 4, இந்த நிகழ்ச்சி ஆரம்பம் முதலே ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் இதில் பிரபல தொகுப்பாளர் அர்ச்சனா வைல்ட் கார்டு எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். அதுமட்டுமின்றி நடிகை ரேகா இந்த நிகழ்ச்சியிலிருந்து சென்ற வாரம் வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில் கமல் ஆரியிடம் நேர்மையாக விளையாடினால் பலன் கிடைக்கும், நீங்கள் நேர்மையாக தான் விளையாடியதனால் காப்பாற்றப்படுகிறீர்கள் என கூறியுள்ளார்.

மேலும் இதை வைத்து பார்க்கும் போது மீதம் இருப்பவர்களில் ஆஜீத் தான் வெளியிருவார் என தெரிகிறது, அவரிடம் ஏவிக்ஷன் ப்ரீ பாஸ் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.