Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தலயா, தளபதியா, பிக்பாஸ் அழைப்பு வந்தால், மறுமணம் எப்போது- எல்லா கேள்விக்கும் தொகுப்பாளினி ரம்யா கொடுத்த பதில்

தொகுப்பாளினி என்பதை தாண்டி இப்போது பிட்னஸ் ரம்யா என்று தான் கூற வேண்டும்.

ஏனெனில் அவர் StayFitWithRamya என்ற டாக் கிரியேட் செய்து வீடியோ வெளியிடுவது, ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளிப்பது என பிஸியாக இருக்கிறார்.

அதேநேரத்தில் சில அழகிய போட்டோ ஷுட்களும் எடுக்கிறார். அண்மையில் ரசிகர்களுடன் சமூக வலைதளத்தில் அவர் கலந்துரையாடினார்.

அதில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவரின் பதில்கள் இதோ,

தலயா? தளபதியா?- தல தளபதி.

மீண்டும் எப்போது தொலைக்காட்சியில் பார்க்கலாம்- 4 வருடம் ஆனது, பிடித்தது போல் நிகழ்ச்சி வந்தால் பார்க்கலாம்.

பிக்பாஸ் கால்- அழைப்பு வந்தால் எடுப்பேன், முடியவில்லை என்றால் பிஸி என கூறுவேன்.

மறுமணம்- நான் யோசிக்காததை நீங்கள் ஏன் யோசிக்கிறீர்கள்.