Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யும், அஜித் பற்றி இப்படி தான் கூறுவார், தல இப்படிபட்டவர் தான்- பிக்பாஸ் சுரேஷ் சக்ரவர்த்தி

பிக்பாஸ் 4வது சீசனில் செம கூலாக போட்டியாளர்களுடன் செம போட்டி போட்டு வருபவர் சுரேஷ் சக்ரவர்த்தி. ஆரம்பத்தில் இருந்து இவருடன் சில போட்டியாளர்களுக்கு சண்டைகள் வந்துகொண்டு இருக்கிறது.

இப்போது அவரது சத்தம் வீட்டில் அதிகமாக இல்லை, மற்றவர்கள் கத்திக்கொண்டு இருக்கிறார்கள். தற்போது சுரேஷ் சக்ரவர்த்தி கொடுத்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

அவர் ஒரு பேட்டியில் கலந்துகொள்ள அவரிடம் அஜித் பற்றி கேட்டுள்ளனர். அதற்கு அவர், இது கொஞ்சம் அதிகமாக தெரியலாம், ஆனால் உண்மை.

அஜித் ஒரு மகாத்மா, அவர் உடல் முழுவதும் நல்ல எண்ணங்கள் தான் உள்ளது, அவருடன் பழகியவர்கள் இதை ஒப்புக் கொள்வார்கள்.

விஜய்யிடம் கேட்டாலும் இதற்கு சரி என கூறுவார் என்கிறார்.