விஜய் டிவி TRPக்கு செக் வைத்த சன் டிவி சீரியல்.. கீழே சரிந்து முன்னணி தொலைக்காட்சி

ஒரு படத்திற்கு பாக்ஸ் ஆபிஸ் எந்த அளவிற்கு முக்கியமாக ரசிகர்கள் மத்தியில் கவனிக்கப்படுகிறதோ, அதே போல் தற்போது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களின் TRP கூட ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்றுள்ளது.

அதிலும் தமிழில் முன்னணி தொலைக்காட்சிகளான சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் ஆகிய தொலைக்காட்சிகளின் TRP ஒவ்வொரு முறையும் டாப் 5 லிஸ்டில் மாறிக்கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் சென்ற வாரம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகள் மூலம் அந்தந்த தொலைக்காட்சிகள் TRP லிஸ்டில் எந்தெந்த இடங்களை பிடித்துள்ளது என்று இங்கு பார்ப்போம்.

இதில் பிக்பாஸ் மூலம் விஜய் தொலைக்காட்சியின் TRP எகிறும் என்று எதிர்பார்த்து கொண்டிருந்த நேரத்தில் சன் டிவியின் சீரியல்கள், பிக்பாஸின் TRPக்கு செக் வைத்து கீழே தள்ளியுள்ளது.

இதுமட்டுமின்றி, முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக ஜீ தமிழ் TRPயில் மிகவும் கீழே சரிந்து 3ஆம் இடத்தை பிடித்துள்ளது, ஜீ தொலைக்காட்சியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.