Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கிறாரா தொகுப்பாளினி பாவனா- அவரே போட்ட டுவிட்

பிக்பாஸ் 4வது சீசன் தொடங்கி 3 வாரங்கள் முடிந்துவிட்டது. இதற்குள்ளேயே பிக்பாஸ் போட்டியாளர்களை இப்போது யாரை மிஸ் செய்கிறீர்கள் என்பதை கூற சொல்கிறார்.

இதனால் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் அவர்களுக்கு நெருக்கமானவர்களை பற்றி பேசி கொஞ்சம் எமோஷ்னல் ஆகிறார்கள்.

அந்த புரொமோக்கள் எல்லாம் ரசிகர்களிடம் ஷேர் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் தொகுப்பாளினி பாவனா தனது டுவிட்டரில் IPL நிகழ்ச்சிக்காக நான் 50 நாள் எனது வீடு, குடும்பத்தை விட்டு தான் இருந்தேன், அழவில்லை, எமோஷ்னல் ஆகவில்லை.

மூன்றே வாரத்தில் பிக்பாஸ் போட்டியாளர்கள் என்ன இப்படி செய்கிறார்கள் என டுவிட் போட்டுள்ளார். அதைப் பார்த்த காமெடி நடிகர் சதீஷ், அப்போ நீங்கள் அடுத்த பிக்பாஸ் சீசன் போகப்போறீங்க என கமெண்ட் போட்டார்.

உடனே பாவனா, நோ கண்டிப்பாக இல்லை என அவருக்கு பதில் கூறியுள்ளார்.