Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஜீ தமிழ் சீரியலில், விஜய் டிவியின் சூப்பர்ஹிட் ஜோடி.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர்ஹிட் தொடர்களில் ஒன்று கல்யாணம் முதல் காதல் வரை இதில் ஹீரோவாக அமித் நடித்திருப்பார். இவருக்கு ஜோடியாக சில எபிசோட்கள் மட்டும் நடித்திருந்தவர் நடிகை சைத்ரா ரெட்டி. இவர் யாரடி நீ மோஹினி சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் அமித் விஜய் டிவியில் இருந்து விலகி தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் திருமதி ஹிட்லர் எனும் சீரியலில் நடிக்கவிருக்கிறார்.

இந்த தொடரின் ப்ரோமோ ஒன்றை ஜீ தமிழ் ஒளிபரப்பியுள்ளது. இதில் அமித் ஹீரோவாக நடிக்க, நடிகை கீர்த்தனா இந்த தொடரின் நாயகியாக நடிக்கிறார். பிரபல மூத்த முன்னணி நடிகை அம்பிகா இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

தற்போது இந்த தொடரில் நடித்திருப்பதாக சைத்ரா ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் ஸ்ட்ரோயில் பதிவிட்டுள்ளார்.அமித்தும் இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.சைத்ரா இந்த தொடரில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.