முக்கிய டிவி சீரியலலிருந்து விலகும் பிரபல நடிகரின் மகள்! அதிரடி முடிவு - சர்ச்சை ரகசியம்?
டிவி சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல மோகம் இருக்கிறது. அண்மையில் புதிது புதிதாக பல சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டன.
சீரியல்களில் முன்னணியில் இருக்கும் தொலைகாட்சி ஒன்றில் பூவே உனக்காக சீரியல் ஒளிபரப்பாகிவருகிறது.
இதிலிருக்கும் இரண்டு கதாநாயகிகளில் ஒருவர் நடிகை ஜோவிட்டா. பிஸியாக இந்த சீரியலில் நடித்துக்கொண்டிருந்த அவர் சீரியலலிருந்து விலக முடிவு செய்துவிட்டாராம்.
உடனே விலகினால் தயாரிப்பாளர் பாதிக்கப்படுவார் என்பதால் சில நாட்கள் நடித்துக்கொடுத்துவிட்டு பின்னர் விலகலாம் என்ற திட்டத்தில் இருக்கிறாராம்.
மேலும் தன்னுடைய கதாபாத்திரத்தை சீக்கிரம் முடித்து விடுவிக்கும் படி கோரிக்கை வைத்துள்ளாராம்.
ஏன் இவர் இப்படி திடீரென முடிவெடுத்தார் என்ற கேள்விகள் பலருக்கும் எழுந்துள்ளன.
ஜோவிட்டா நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.