TRP ரேட்டிங் ல் கடும் பின்னடைவு! ! பிக்பாஸ் பிரபலத்துக்கு வந்த சோதனை! திண்டாட்டும் டிவி ஷோ!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 தற்போது டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் 59 வது நாளை எட்டிவிட்டது. இதே போல தெலுங்கில் நடிகர் நாகார்ஜூனா பிக்பாஸ் சீசன் 4 ஐ தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிகழ்ச்சி 87 வது நாளை எட்டிவிட்டது. 100 நாட்களுக்கும் இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் கடந்த வாரம் போட்டியாளர் யாரும் வெளியேற்றப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிகழ்ச்சியின் கடந்த சீசன் 3 ல் போட்டியாளராக கலந்து கொண்டவர் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி ஸ்ரீமுகி.
Bomma Adhirindi என்ற டிவி நிகழ்ச்சியை முக்கிய சானலில் அவர் தொகுத்து வழங்கி வருகிறார். சமீபத்திர நாட்களாக இந்நிகழ்ச்சி நல்ல வரவேற்பு இல்லையாம்
அத்துடன் TRP ல் 3.5 என்ற புள்ளிகளையே பெற்றுள்ளதாம். இதனால் நிகழ்ச்சி மிகவும் பின்னடைவை சந்தித்துள்ளதால் இதனை சரி செய்ய ஸ்ரீமுகி புதிய ஐடியாக்களை புகுத்தி பார்வையாளர்களை கவர வேண்டிய கட்டாயத்தில் இருப்பதுடன் தனக்கான பிரபலத்தன்மையையும் தக்க வேண்டிய சூழலில் இருக்கிறாராம்.