பிக்பாஸ் நிகழ்ச்சியின் சுவாரஸ்யமான நாட்களான வார இறுதி வந்துவிட்டது.
கமல்ஹாசன் அவர்கள் வரும் நிகழ்ச்சி, போட்டியாளர்கள் செய்யும் தவறுகளை வைத்து அவரின் நடவடிக்கைகள் இருக்கும்.இந்த வாரம் யார் வெளியேறுவார் என்று ரசிகர்களால் கணிக்க முடியவில்லை.
ஏனெனில் எல்லோரும் கொஞ்சம் ஸ்டாராங்கான போட்டியாளர்கள் தான்.கடைசியாக இருந்த ஓட்டிங் விவரங்களை வைத்து பார்க்கும் போது அனிதா மற்றும் சனம் குறைவான ஓட்டுகள் பெற்றிருந்தனர்.
இந்த நிலையில் அனிதாவின் கணவர் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் மிஸ் யூ, விரைவில் பார்க்கலாம் என பதிவு போட ரசிகர்கள் அப்போது இவர்தான் என உறுதியாக கூறிவருகின்றனர்.ஆனால் இறுதியில் என்ன நடக்கப்போகிறது என்பதை நாளை பார்ப்போம்.