Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக் பாஸின் குரல் இவருடையது தானா? முதன் முறையாக வெளியான புகைப்படத்தால் கிசுகிசுக்கப்படும் விஷயம்..

தமிழில் கடந்த நான்கு ஆண்டுகளாக பிக் பாஸ் நடைபெற்று வருகிறது. இதில் பிக் பாஸ் சீசன் 1,2,3 என மூன்று சீசனும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

பிக் பாஸில் இருந்து இதுவரை யாருக்கும் தெரியாத ரகசியாக இருந்த விஷயம், பிக் பாஸின் குரல். ஆம் பிக் பாஸிற்கு குரல் கொடுப்பவர் யார் என்ற கேள்வி அனைவருக்கும் உண்டு.

சில ஆண்டுகளுக்கு முன் பிக் பாஸ் துவங்கிய போது, தமிழ் பிக் பாஸிற்கு குரல் கொடுப்பவர், சீரியல் நடிகர் அமித் என்று தகவல்கள் வெளியானது.

ஆனால் இதனை மறுத்தார் அமித். நான் கன்னடத்தில் ஒரு முறை பிக் பாஸிற்கு குரல் கொடுத்துள்ளேன். ஆனால் தமிழில் இதுவரை நான் குரல் கொடுக்கவில்லை என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் பிக் பாஸாக குரல் கொடுப்பவரின் பெயர் சச்சிதானந்தம் என்றும், இவர் பாலிவுட் நடிகர் என்றும் தகவல்கள் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

ஆனால் பிக் பாஸில் பணிபுரிந்து வரும் வேளை ஆட்களுக்கே, பிக் பாஸ் யார் என்று தெரியாது. அதுமட்டுமில்லாமல் பிக் பாஸுக்கு குரல் கொடுப்பவரின் வயது 35ல் இருந்து 40 வயது இருக்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.

இதனால் சச்சிதானந்தமாக இருக்க வாய்ப்பில்லை என்று தகவல்கள் கூறப்படுகிறது.

பிக் பாஸ் குரல் இவருடையது என்று கிசுகிசுக்கப்பட்டு வரும் நபரின் புகைப்படங்கள் இதோ..