Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கமலை பார்த்து அந்த ஒரு கேள்வி! கூட்டத்தை திக்கு முக்காட வைத்த நபர்! வெளிப்படையாக கேட்ட சம்பவம்! வேகமாக பரவும் வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 தற்போது 80 நாட்களை தொட்டுவிட்டது. இந்த சீசனில் போட்டியாளர்களாக கலந்துகொண்ட ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சனம் ஷெட்டி, சம்யுக்தா, நிஷா, ரமேஷ், அர்ச்சனா ஆகியோர் வெளியேறிவிட்டனர்.

தற்போது ஆரி, அனிதா, ரியோ, ஷிவானி, ரம்யா, கேப்ரியல்லா, பாலாஜி, ஆஜித், சோம் சேகர் ஆகியோர் மட்டுமே போட்டியாளர்களாக இருக்கின்றனர். இவர்களின் யார் இந்த வாரம் வெளியேற்றப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

அனிதா ஆரம்ப நாட்களிலிருந்தே பிக்பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைகளில் சிக்கியவர். சுரேஷ் சக்ரவர்த்தியுடன், எச்சில் தெரிப்பது விசயம், சுமங்கலி விசயம் என பேசி பரபரப்பை உண்டாக்கியவர்.

அவருக்கு சில எதிர்ப்புகளும் வந்தது. சுரேஷ் சக்ரவர்த்திக்கு ஆதரவும் பெருகியதையும் மறக்க முடியாது. ரியோவுடன் வாக்குவாதம் என செய்த அவர் ஆரியுடன் அண்மையில் வாக்குவாதம் செய்து மரியாதை குறைவாக நடந்து கொண்ட விசயம் கடும் எதிர்ப்பை உண்டாக்கியுள்ளது. ஆரியின் ரசிகர்கள் அனிதா மீது கோபத்தில் உள்ளனர்.

இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் தொகுப்பாளரான கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற போது ரசிகர் ஒருவர் இந்த அனிதா இந்த வாரம் வெளியே போவாரா என கூட்டத்தின் நடுவே கேட்க, அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.