இப்போது தான் பிக்பாஸ் 4வது சீசன் முடிந்தது, அதற்குள் 5வது சீசன் பற்றி வந்த தகவல்- அடடே அதற்குள்ளா?
விஜய்யில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் 4வது சீசன் அண்மையில் முடிந்தது. ஆரி வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார்.
நிகழ்ச்சியை முடித்து 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்தவர்கள் இப்போது தான் தங்களது வீடுகளுக்கு சென்றுள்ளனர். அதற்குள் பிக்பாஸ் 5வது சீசன் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது.
கொரோனா காரணமாக தான் பிக்பாஸ் 4வது சீசன் வருட இறுதியில் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது 5வது சீசன் வரும் 2021 ஜுன் அல்லது ஜுலை மாதமே தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.