Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் பிறகு நடிகை ரம்யா பாண்டியனுக்கு அடித்த லக்- செம நியூஸ்

பிக்பாஸ் 4வது சீசன் மூலம் தமிழக மக்களின் மனதை கவர்ந்தவராக உள்ளார் ரம்யா பாண்டியன். புடவையில் ஒரு போட்டோ ஷுட் ஒரே நாளில் அவ்வளவு பிரபலம் ஆனார்.

அதன்பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் பின் ஒரு காமெடி நிகழ்ச்சிக்குள் நடுவராக இருந்து வந்தார்.

பின் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் பிக்பாஸ் 4வது சீசனில் கலந்துகொண்டு 100 நாட்களை கடந்தார்.

தற்போது 2D நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் வாய்ப்பு ரம்யா பாண்டியனுக்கு கிடைத்துள்ளதாம். அது பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதை என்றும் கூறப்படுகிறது.

இந்த சந்தோஷ செய்தியை ரம்யாவே தனது டுவிட்டரில் ஷேர் செய்துள்ளார்.