Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமாவுக்கு கிடைத்த பெரிய அங்கீகாரம்..! செம கொண்டாட்டத்தில் அவர் செய்த விஷயம்..

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ், தமிழில் பெரிய ஹிட்டாகியுள்ள இந்த சீரியல் தற்போது ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என முக்கிய மொழிகளிலில் ரீமேக் செய்துள்ளனர்.

அதுமட்டுமின்றி இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபலங்கள் அனைவருக்கும் ரசிகர்கள் அதிகம், இதில் நடிக்கும் சுஜிதா தனக்கென தனி யூடியூப் சேனல் வைத்து, அதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் குறித்து பல்வேறு வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் இத்தொடரில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமாவும் தனியாக யூடியூப் சேனல் தொடங்கி, பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

'ஹேமாஸ் டைரி’ என்ற அந்த சேனலுக்கு யூடியூப் சார்பில் ‘சில்வர் ப்ளே பட்டன்’ (Silver Play Button) கிடைத்துள்ளதால் இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு அனைவரும் நன்றி தெரிவித்துள்ளார் நடிகை ஹேமா.